;
Athirady Tamil News

லசந்த விக்ரமதுங்க படு கொலையுடன் தொடர்புடைய உயரதிகாரி உயிர்மாய்ப்பு ; துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட உடல்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பிலும் இடம்பெறும் விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தொடர்புபட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.