;
Athirady Tamil News

ஐஸ், கஞ்சாவுடன் போதைப்பொருள் வியாபாரி கைது

0

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்இ வியாழக்கிழமை(16) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வீட்டைப் பொலிஸார் திடீரென முற்றுகையிட்ட போது, அவர் விற்பனைக்காக ‘ஐஸ்’ போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த வேளை கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 4,400 மில்லிகிராம்,கஞ்சா- 30 கிராம்,போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 21,000 ரூபா,அளவிடும் தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு இணங்க, மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த வெற்றிகரமான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.