;
Athirady Tamil News

யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

0

தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (16) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். கூட்டத்தில் அவர்,”ஊழல் லஞ்சம் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பதவிகள் பறிக்கப்படும். தவெக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம்” எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.