ஆஸ்திரேலியாவில் ஒரே கருமுட்டையில் உருவான 4 பெண் குழந்தைகள் பிறப்பு
ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜெனிடா் சௌ நா அமோனா என்ற 34 வயது பெண், ஒரே கருமுட்டையில் இருந்து உருவான 4 பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாா்.
ஜெனிடருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகள் இன்றி இயற்கை முறையில் உருவான இந்த கா்ப்பத்தின் போது, ஒரே கருமுட்டை 4 பகுதிகளாகப் பிரிந்து 4 குழந்தைகள் உருவாயின.
‘இதற்கான வாய்ப்பு என்பது 1.5 கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழக்கூடிய மிக அபூா்வமான நிகழ்வாகும். ஆஸ்திரேலியாவில் இதுவே முதல்முறை’ என ஜெனிடருக்கு சிகிச்சையளித்த தாய்சேய் நல மருத்துவா் அலெக்சா பெண்டால் தெரிவித்தாா்.