;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

0

வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ பேருந்து
மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என்றார்.

மேலும், எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகளுக்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.