புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி: பேருந்து உரிமையாளரும் கைது
வவுனியா, புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியவைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியவை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சாரதி அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரிய வந்தது.
காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் உள்ள ஒருவருக்கு பேருந்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் குறித்த பிரபல பேருந்து சேவையின் உரிமையாளர் புளியங்குளம் பொலிசிற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பேரூந்து உரிமையாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.