;
Athirady Tamil News

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்!

0

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று(11) அதிகாலை சுமார் 3.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனமல்வில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பேருந்தில்15 பயணிகள் வரை பயணித்திருந்தாலும் அதிஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.