;
Athirady Tamil News

பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை

0

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதான இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அந்த ரிசார்ட்டுக்கு 28 வயதானவர் ஆவேசமாக வந்திருக்கிறார்.

குறித்த பெண்ணிடம் பேச வேண்டும் எனக் கூறி, அவரை ரிசார்ட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் ரிசார்ட் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

கொடூர தாக்குதல்
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற ஆவேசமடைந்த இளைஞன் பெண்ணின் கழுத்தை அறுத்திருக்கிறார்.

தடுக்க முயன்ற ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி விரட்டியிருக்கிறார் இதனிடையே, கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞனை கைது செய்த பொலிசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இருவரும் விலகியதுடன், காதலையும் முறித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, செல்போனுக்கு வந்த சில மெசேஜ்கள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், ஆவேஷமாக ரிசார்ட்டுக்கு வந்த ஜித்து, தின்ஷாவை பேசுவதற்காக வெளியே அழைத்துச் சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.