;
Athirady Tamil News

இலங்கைக்குள் சுற்றித் திரியும் மிகவும் ஆபத்தான நபர்கள்..

0

2019 – 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.