;
Athirady Tamil News

வவுனியா – குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

வவுனியா – குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் தோட்ட வேலைக்கு சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மீது யானை தாக்கியுள்ளது.

இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்பவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தவராவார் இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.