;
Athirady Tamil News

தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது

0

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐவர் கைது
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கொக்குளாய் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும் சான்றுப் பொருட்களுடன் கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வோனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.