;
Athirady Tamil News

தீவிரமடையும் வறட்சி – நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

கடும் பாதிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.