;
Athirady Tamil News

இலங்கையர்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 52.96% என்ற வகையில் 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.

இரண்டாவதாக தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,968 ஆகும்.

இதேவேளை, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.