;
Athirady Tamil News

டிக்டாக்-க்கு ரூ3,828 கோடி அபராதம்: குழந்தைகளின் தனியுரிமை வழக்கில் அமெரிக்க அரசுடன் சமரசம்

0

வாஷிங்டன்

குழந்தைகளின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் ரூ3,828 கோடி தொகைக்கு சமரசம் செய்துள்ளது.

குற்றச்சாட்டு

டிக்டாக் மற்றும் அதனை நிர்வகிக்கும் சீனாவில் உள்ள பைட் டான்ஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2024-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் 13 வயது கீழ் உள்ள குழந்தைகளின் தனிபட்ட தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி சேகரித்ததாகவும் மேலும், குழந்தைகளின் கணக்குகளை நீக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தபோதும், சில கணக்குகளை டிக்டாக் நீக்கவில்லை என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது

சமரசம்

இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டிக்டாக் தரப்பில் ரூ28,71கோடி உடனடியாகவும்ரூ957 கோடி பின்னரும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

குழந்தைகளின் தனியுரிமை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில்,டிக்டாக்-க்கு

எதிரான இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெற்றி

இது குறித்து அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் கூறுகையில், “இந்த சமரசம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.