தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி
மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக தீவிர விசாரணை
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.