;
Athirady Tamil News

கினியா: குப்பை மேட்டில் நிலச்சரிவு – 30 பேர் பலி

0

கொனகெரி,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா. இந்நாட்டின் தலைநகர் கொனகெரியில் டார் எஸ் சலாம் என்ற பகுதியில் குப்பை மேடு இருந்தது. இந்த குப்பை மேட்டில் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த குப்பை மேடு அருகே மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.

நிலச்சரிவு – 30 பேர் பலி

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குப்பை மேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குப்பை மேடு சரிந்து அருகில் இருந்த குடிசைகள் புதைந்தன.

இதில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.