;
Athirady Tamil News

நேபாளத்தில் அவலம்; சடலங்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு !

0

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அங்குள்ள வைத்தியசாலை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன.

இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கவும், அவர்களை உறவினர்கள் விரைவில் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை ‘க்யூஆர்’ (QR Code) குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

சித்வான் உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்படும் உடல்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான க்யூஆர் குறியீடு ஒதுக்கப்படுகிறதுஉடலின் விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மீட்கப்பட்ட இடம் போன்ற தகவல்கள் இந்த க்யூஆர் குறியீட்டுடன் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம் உறவினர்கள் பிணவறைகளுக்கு நேரடியாகச் சென்று தேடுவதற்குப் பதிலாக, க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களது உறவினர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.