;
Athirady Tamil News

கல்முனை பிரதான வீதியில் யானைகள் புகுந்து அட்டகாசம்- சத்தோச களஞ்சியம் மற்றும் வீட்டின் மதில்கள் சேதம்(video)

0

அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ (Akram Farm House) முன்பாக உள்ள லங்கா சத்தோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வீடொன்றின் பிரதான வாயில் , சுற்றுமதில்கள் என்பவற்றை இன்று(25) அதிகாலை இரண்டு காட்டு யானைகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளும், சத்தோச களஞ்சியசாலையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகிலிருந்த வீடொன்றின் கேற் மற்றும் சுவர்களையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயற்சித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த இரு யானைகளும் அப்பகுதியிலுள்ள குளத்துப் பகுதியை நோக்கி வீதியைக் கடந்து வெளியேறிச் செல்லும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன், அசம்பாவிதங்கள் அசம்பாவிதங்கள் ஏதும் அசம்பாவிதங்கள் தொடர்வதைத் தடுக்க வனவிலங்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.