வீதியில் சென்ற பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள் – தங்கச் சங்கிலியால் ஏற்பட்ட ஆபத்து
மட்டக்களப்பு – ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (05.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க சங்கிலியை பறிக்க முயற்சி
ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக இரண்டு பெண்கள் நடந்து செல்லும் பொழுது அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து செல்ல முயற்சி செய்த பொழுது அவர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.