;
Athirady Tamil News

சீனாவில் நிலச்சரிவு: இருவா் உயிரிழப்பு; 10 போ் மாயம்!

0

சீனாவின் சுய்சுவான் பகுதியில் ‘செளடெல்’ புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 போ் மாயமாகினா். பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஆக.28-இல் கரையைக் கடந்த செளடெல் புயல், பின்னா் ஃபுஜியான் மாகாணத்தில் கடந்த செப்.3-ஆம் தேதி கரையைக் கடந்தது.

ஃபுஜியான் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலா் மாயமாகினா். பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், 6 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். வெள்ளக்காடாக மாறியுள்ள தெருக்களில் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

செளடெல் புயலின் தாக்கத்தால் ஜியாங்சி மாகாணத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. சுய்சுவான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மீட்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 பேரை காணவில்லை. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. கிராமவாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.