கொழும்பில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்
கொழும்பு தெஹிவளை – கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.