;
Athirady Tamil News

எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!

0

இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்
ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.