;
Athirady Tamil News

அதிகாலையில் கோர விபத்து – இரண்டு பெண்கள் பலி

0

களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.30 மணியளவில் புகையிரதப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியுள்ளனர்.

இரண்டு பெண்கள் பலி
இவர்கள் புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மகள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த கோர விபத்தில் பெண்ணும் அவரது மருமகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.