தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம்
தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம்
நேற்றுமுந்தினம் ( 16-09-2026 ) அன்று தீவகம் நயினாதீவு பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏழு வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சென்ற ஊர்காவற்துறை பொலிசார் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினை சேர்ந்த இந்த சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையினை தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் உப தலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அதற்கமைய தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் தலைவர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்களின் சொந்த நிதியில் யாழ்ப்பாணம் இன்பம் மலர்ச்சாலையின் வாகனத்தில் சிறுமியின் பூதவுடல் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தகுந்த நேரத்தில் குறித்த நற்செயலை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிசாருக்கும், தீவகம் சிவில் சமூகத்தினருக்கும் நன்றிகளை மரணமடைந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.