புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வினைத்திறன் மிகுந்த சேவையாற்றிய வைத்தியர் திரு.
மொகம்மட் ஜௌபர் மொகம்மட் பர்ஷாத் அவர்கள் உயர்கல்வி கற்கைக்காக கொழும்புக்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்
புங்குடுதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் உப தலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
