;
Athirady Tamil News

கொடிகாமத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

0
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் 
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்
வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
வேகனோர் காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி  விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டி ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொடிகாம பொலிஸார் , இரு வாகன சாரதிகளையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விபத்துக்குள்ளான வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்
You might also like

Leave A Reply

Your email address will not be published.