புங்குடுதீவு பிரதான வீதியில் முதல் தடவையாக சோலர் மின்விளக்கு பொருத்தும் திட்டம் நடைமுறைக்கு !!
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ( சுவிஸ் ) நடப்பு ஆண்டு நிர்வாகத்தின் ரூபாய் 265000 நிதியுதவியில் புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு மேற்கோள்ளப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி மாற்றுத்திறனாளிகள் நலன்புரி நிலையத்திலிருந்து கண்ணகை அம்மன் கோவில் வரவேற்பு தூபி வரையிலான பிரதான வீதியில் இதுவரை காலமும் மின்சார இணைப்பு காணப்படாத நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒன்பது சூரிய சக்தி வீதி ஒளி விளக்குகள் ( 400 வோட்ஸ் 9 × 25000 = 225000 ரூபா ) பொருத்தப்பட்டுள்ளன. இவ்வீதியின் எதிர்ப்பக்கமாகவே தற்போது கள்ளியாறு நன்னீர் சேகரிப்பு திட்டம் மேற்கோள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மடத்துவெளி – வல்லன் இணைப்பு சந்தியில் ரூபாய் 30000 பெறுமதியான இரண்டு LED
( 150 வோட்ஸ்) மின் விளக்குகளும், மாற்றுத்திறனாளிகள் நலன்புரி நிலையம் முன்பாக ரூபாய் 10000 பெறுமதியான ஒரு LED மின்விளக்கும்( 50 வோட்ஸ் ) பொருத்தப்பட்டுள்ளன.
வேலணை பிரதேச சபையின் ஒத்துழைப்போடு நடைபெற்ற குறித்த செயற்பாட்டில் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான திரு.ராஜேந்திரம் கஜேந்திரன், திரு. கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
