;
Athirady Tamil News

தியாக தீபத்தின் சிலையை மீண்டும் நிறுவ சட்டரீதியாக அனுமதி வழங்குங்கள்: அரசிடம் சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை

0
நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு
அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சி . வீ.கே சிவஞானத்திடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

பொலிஸார் சிலையை அகற்றிய விடயத்திலே தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அதற்கு தாங்கள்  பொறுப்பில்லை என்ற வகையிலே கடற்தொழில் அமைச்சர் கூறியுள்ளார்

அமைச்சருக்கோ அரசாங்கத்திற்கு சிலை அகற்றப்பட்டதில்  தொடர்பில்லை என்றால், தயவுசெய்து  சிலையை திருப்பிக் கொண்டுவந்து வையுங்கள். சிலையை மீள வைத்தால் பிரச்சனை முடிந்தது.

தியாக தீபத்திற்கு சிலை வைக்கும் விடயத்தில் மாநகர சபை எதிர்க்காது. அவ்வாறு எனில் மாநகர சபையினால் அமைச்சர் என்ற ரீதியில் கடற்தொழில் அமைச்சருக்கு விண்ணப்பம் தந்தால் அதனை அங்கீகரித்து , அமைச்சரவை அனுமதி பெற்று , சட்டரீதியாக சிலை வைக்க அனுமதி பெற்றுக்கொடுங்கள்

தயவுசெய்து சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சர் மற்றும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.