;
Athirady Tamil News

‘வெளிநாட்டுத்’ துப்பாக்கிகள் மீட்பு: விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பால் பரபரப்பு

0
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து, சாகாமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் இரண்டும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று மாலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இத்துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான தீவிர விசாரணைகளை திருக்கோவில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.