;
Athirady Tamil News

மத்திய கிழக்கில் களமிறங்கும் பல்லாயிரம் அமெரிக்கப் படைவீரர்கள் ; பீதியை கிளப்பும் ட்ரம்ப்

0

ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் 9,000 வீரர்களை கொண்ட குழுவை கப்பல்கள் மூலம் மத்திய கிழக்குக்கு அனுப்பி வருகிறது.

புதன்கிழமையன்று இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தில், விமான கேப்டனை கத்தியால் குத்தி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற துணை விமானிக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறினார்.

2,000 கடற்படை படைவீரர்கள்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ​​தாக்குதல் நடத்திய விமானிக்கும் ஈரானுக்கும் (ஈரான் அரசுக்கும்) இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது “எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதற்கான பதில் ‘ஆம்’ என்றே நான் கூறுவேன்; ஆனால் இது குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம்,” என்று ட்ரம்ப் கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்காமல் கூறினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்குக்கு சென்று கொண்டிருக்கும் இந்த கப்பல் குழுவில் மொத்தம் 7,000-க்கும் மேற்பட்ட கடற்படை மாலுமிகளும், 2,000 கடற்படை படைவீரர்களும் உள்ளனர். இதில் ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ விமானம் தாங்கி கப்பல் குழுவும், ‘யுஎஸ்எஸ் மேக்கின் ஐலேண்ட்’ நீர்-நிலத் தாக்குதல் தயார்நிலை குழுவும் (இதில் ‘யுஎஸ்எஸ் ஜான் பி. முர்தா’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆங்கரேஜ்’ ஆகிய தரையிறங்கும் கப்பல்கள் உள்ளன அடங்கும்.

உணர்திறன் மிக்க ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ‘அசோசியேட்டட் பிரஸ்’ (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலின்படி, அக்டோபர் மாத இறுதிக்குள் இப்பகுதியில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்படக்கூடும்.

மத்திய கிழக்கில் ஏற்கனவே பணியில் உள்ள வீரர்களை கருத்தில் கொண்டால், இந்த நடவடிக்கை அமெரிக்க கடற்படையின் இருப்பை வழக்கத்திற்கு மாறாக 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், கடற்படை வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் என மிக உயர்ந்த எண்ணிக்கைக்கு கொண்டு செல்லும். 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக, கடற்படை ஏப்ரல் மாதத்தில் மூன்று விமானம் தாங்கி தாக்குதல் குழுக்களை மத்திய கிழக்கில் நிறுத்தியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.