இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிவிப்பு
இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட சந்திப்பொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) தலைமையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தூதரக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கமைய, டிசம்பர் 4-ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளது.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாகப் பதிவு செய்வது கட்டாயமானது என்பதுடன், கலந்துகொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள எதிர்பார்க்கும் அமெரிக்கப் பிரஜைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24-ஆம் திகதிக்கு முன்னர் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.