;
Athirady Tamil News

PSTA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் . போராட்டம்!

0

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அதனை முழுமையாக இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமே PSTA என அழைக்கப்படுகிறது.

குறித்த சட்ட வரைவு தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்வேறு கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பயங்கரவாதம் தொடர்பான வரையறைகள், கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பல்வேறு கலந்துரையாடல்களும் எதிர்ப்புப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.