;
Athirady Tamil News

கல்முனையில் “சமைக்கலாம் வாங்க” இலவச சமையற்கலை பயிற்சிப் பட்டறை

0

எடின்பெரோ நிறுவனம், ஊவா எப்.எம். (Uva FM) வானொலி மற்றும் கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய “சமைக்கலாம் வாங்க” எனும் தொனிப்பொருளிலான விசேட இலவச சமையற்கலைப் பயிற்சி நிகழ்வு செவ்வாய்க்கிழமை(20) கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் அஸ்ஹர் ஆதமின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை ஊவா வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.எம். றமீஸ் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான், பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் தலைவி கலாபூஷணம் மஷூரா சுஹுர்தீன், கலாசார அதிகார சபையின் பொருளாளர் சம்சுதீன் தஸ்தகீர், கலாசார உத்தியோகத்தர் எஸ். ரஜாயா உட்பட கலாசார அதிகார சபையின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரபல சமையற்கலை நிபுணர் எம்.எம். றிபாஸ் இந்நிகழ்வில் முதன்மை வளவாளராகக் கலந்து கொண்டு, பங்கேற்றவர்களுக்குச் செய்முறைப் பயிற்சிகளுடன் பல்வேறு பயனுள்ள சமையற்கலை நுட்பங்களையும் நவீன அணுகுமுறைகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன், பயிற்சியின் போது கலந்து கொண்டு தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திய பங்கேற்பாளர்களுக்கு விசேட பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.