விவசாய மற்றும் சுகாதாரத் துறை நலனை கருத்தில் கொண்டு தேசிய லொத்தர் சபை செயற்படுகிறது! அதன் தலைவர் எம். டீ. சீ. ஏ. பெரேரா
நாட்டின் விவசாய மக்கள், சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய லொத்தர் சபையினால் பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் எம். டீ. சீ. ஏ. பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய லொத்தர் சபையின் விற்பனை முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது விற்பனை முகவர்களுக்கு ஸ்கேன் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் தேசிய லொத்தர் சபையின் டிக்கற் விற்பனையை அதிகரிப்பது மற்றும் அதன் பரிசு தொகை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய லொத்தர் சபையின் விற்பனை முகவர்கள், அதன் பொது முகாமையாளர் ஏ. எம். அரீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
