ஷேக் ஹசீனா வெளியேறிதை படம்பிடித்த முன்னாள் விமானப் படை அதிகாரி சடலமாக மீட்பு
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியைப் படம்பிடித்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி, மாயமாகியிருந்த நிலையில் டாக்காவில் உள்ள துராக் நதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.
2024 ஆகஸ்ட்டில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவா், உளவுத் துறையின் கண்காணிப்பில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.