பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
;
சமிக்ஞைச் செயலாக்கம் மற்றும் உருவ அமைப்பு வகைப்பாடு ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியாளரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2019 நவம்பர் 4ஆம் திகதி லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
உயர்கல்வித் துறைக்கான சிறப்பான பங்களிப்பு, கல்வியில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், பின்தங்கிய சமூக இளையோர் மற்றும் அகதி மாணவர்களின் கல்விக்கு ஆதரவளித்தல் ஆகிய பணிகளுக்காக 2026ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இவருக்கு ‘நைட்ஹுட்’ கௌரவம் வழங்கப்பட்டது.
சர்வதேச அனுபவமும் தலைமைத்துவ ஆற்றலும் கொண்ட பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவின் இவ்விஜயம், SLIIT Northern Uniயின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்தவும், வட இலங்கையின் எதிர்காலத் தலைமுறையினருக்குப் புதிய உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.