;
Athirady Tamil News

ஏலத்திற்கு வரும் சதாம் உசேனின் ஆடம்பர விமானம்

0

பாக்தாத்,

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் உட்பட இரண்டு அரிய வகை போயிங் 747 விமானங்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈராக் அரசு முடிவு எடுத்துள்ளது.

துனிசியா

1991-ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரின்போது, அமெரிக்க கூட்டு படைகளின் வான்வழி தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக இந்த விமானங்கள் துனிசியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு சர்வதேச தடைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த 35 ஆண்டுகளாக அவை அங்கேயே பயன்பாடின்றி முடங்கி கிடக்கின்றன.

ஏலம்

இந்நிலையில், படுக்கையறை, மாநாட்டு அறை உள்ளிட்ட சகல ஆடம்பர வசதிகளும் கொண்ட சதாம் உசேனின் வி.ஐ.பி. விமானம் மற்றும் சரக்கு போக்குவரத்து விமானம் ஆகிய இரண்டையும் ஏலத்தில் விட ஈராக் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்பணமாக 1.8 லட்சம் அமெரிக்க டாலர்கள்

இதற்கான அடிப்படை விலையாக தலா 9 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், முன்பணமாக 1.8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.66 கோடியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

பல தசாப்தங்களாக துருப்பிடித்து முடங்கி கிடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க விமானங்களை, அருங்காட்சியகத்திற்காகவோ அல்லது உதிரி பாகங்களுக்காகவோ யார் வாங்க முன்வருவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.