;
Athirady Tamil News

திருமணமாகாமலேயே கர்ப்பம்; பிஞ்சு குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற இளம்பெண்

0

திருமணமாகாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண், அந்த குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார்.

பரிசோதனை
அவரை பரிசோதனை செய்தபோது. அவருக்கு சில மணி நேரத்திற்கு முன்பு குழந்தையை பிரசவித்ததும், அதனால் ரத்தபோக்கு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த பெண் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே அடிமாலி அருகே தோக்குப்பாறை சங்குப்பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அடிமாலி போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து. பெண் சிசுவை கைப்பற்றி அடிமாலி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது. அடிமாலி அரசு வைத்தியசாலைக்கு ரத்தப்போக்குடன் சிகிச்சைக்கு வந்த இளம்பெண் தான், இறந்து கிடந்த பெண் சிசுவின் தாய் என்பது தெரியவந்தது.

அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகாத நிலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்தநிலையில் பிரசவித்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தையை அங்கன்வாடி மைய சுவற்றில் அடித்து கொன்றதும் தெரியவந்தது.

தகாத உறவால் பிறந்ததால் அந்த குழந்தையை இளம்பெண் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.