வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்வித் திட்ட சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்வித் திட்ட சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் அமைதிக்கல்வித் திட்டத்தை நிறைவு செய்த 308 ஆசிரிய பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், அமைதிக்கல்வித் திட்டச் செயற்பாடுகளை விளக்கும் கண்காட்சியும் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகுமார் (நிதி நிர்வாக இணைப்பாளர்) மற்றும் திருமதி செல்ரன் யூடிற் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், கல்லூரியின் அமைதிக்கல்வித் திட்ட இணைப்பாளர்களான விரிவுரையாளர்கள் திருமதி ஜெ. தயாநிதி, திருமதி பி. மோகன்ரா, எ. இ. சுமந்திரன், திருமதி எஸ். கார்த்திகா ஆகியோருடன், பிறேம்ராவத் நிறுவனத்தின் அமைதிக்கல்வித் திட்ட இணைப்பாளர்களான குகானந்தராஜா கீர்த்திகா, ப. விமலநாதசர்மா, திருமதி ப. பத்மாதேவி மற்றும் 308 ஆசிரிய பயிலுனர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வின் ஓரங்கமாக, அமைதிக்கல்வித் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் ஆசிரிய பயிலுனர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சியும் அதிதிகளால் பார்வையிடப்பட்டது.
