நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்
மோட்டார் போக்குவரத்துத் துறை, இலங்கை மக்களுக்கு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற குறித்த தொலைபேசி…
அரச வைத்தியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (28)…
G.C.E O/L பரீட்சை நேர அட்டவணை வெளியானது
2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்
கடந்த வாரம் அனுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த பொலிசாரின் கடமைக்கு…
SLTB தலைவர் இராஜினாமா; ஒரு மாதத்திற்குள் இருவர் பதவி விலகல்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை…
இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! – பல்கலையில் வைத்து…
அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து…
நெடுஞ்சாலையில் லொறியை விழுங்கிய பள்ளம்: ஜப்பானில் சாரதியை மீட்கும் பணி தீவிரம்
சாலையில் விழுந்த பயங்கரமான குழியில் லொறி மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் யாஷியோ நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்திப்பில் திடீரென தோன்றிய பெரிய குழியில் ஒரு லாரி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது…
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்யா
வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியது.
கடுமையான சண்டை
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நகரங்களில், ரஷ்யர்களின் தீவிர தாக்குதல்களை தங்கள்…
புலம்பெயர்ந்தோரால்… பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
கட்டுக்கடங்காத புலம்பெயந்தோர் வருகையால் ஏழு ஆண்டுகளுக்குள் பிரித்தானியாவின் மக்கள் தொகை 72.5 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களின் வருகை
வெளியான தரவுகளின் அடிப்படையில், அடுத்த 7 ஆண்டுகளில் மக்களின்…
ஜனாதிபதி யாழ் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார்…
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,…
பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்: 400 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்
தொடர்ச்சியாக வீசிவரும் புயல்களால் பிரான்சின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்
பிரான்சிலுள்ள நார்மண்டி மற்றும் பிரிட்டனி ஆகிய பகுதிகள், தொடர்ச்சியாக வீசிவரும்…
நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடல் – துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக…
நெல்லியடியில் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது.
குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் , சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும் ,…
அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு
அநுராதபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில்…
ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்
ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
அதீத வேகம் ; லண்டன் விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழப்பு
லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை…
கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15…
எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவருக்கு கடும் எதிர்ப்பு
ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறிய அசியல்வாதிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஜேர்மனியில் எல்லைகள் மூடப்படும்
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன்…
திருத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தக சபை, வர்த்தக…
கோவில் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை – பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
ரவுடி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்புராஜ்(32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று…
காங்கோ வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டிலுள்ள ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள்…
மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்
நாட்டில் மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மொபைல் சாதன அடையாள (ஐ.எம்.ஈ.ஐ) பதிவு…
புலமைப் பரிசில் பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள்
காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். எம். முஜீப் தலைமையில் நடைபெற்ற…
கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார்.ஏற்கனவே கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ்…
உலகின் மிக விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? ஒரு கிலோ விலை ரூ.30 ஆயிரம்
உலகின் விலை உயர்ந்த உப்பு ஒரு கிலோ 30000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விலையுயர்ந்த உப்பு
அனைத்து நாடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பின் விலை குறைவாக இருக்கும். பல நாடுகளில் எளிதாக சமையல்…
பிரித்தானியாவில் வறுமையால் அதிகம் பாதிக்கப்படும் இங்கிலாந்து மக்கள்
பிரித்தானியாவில் மற்ற பகுதிகளை விட இங்கிலாந்து மக்கள் வறுமையால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் வாழும் குடும்பங்களுக்கு வறுமை, பிரித்தானியாவின் மற்ற பகுதிகளை விட அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக The Institute of…
3,000 கொடூர குற்றவாளிகள்… தீக்கிரையாக்கப்பட்ட சிறைச்சாலை: பலர் மரணம்
கோமா நகரில் மிகப்பெரிய சிறை உடைப்பு சம்பவம் நடந்துள்ளதுடன், முற்றுகையிடப்பட்ட நகரம் முழுவதும் கொள்ளை மற்றும் குழப்பம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தப்பியோடிய கைதிகள்
M23 ஆயுதக் குழு உறுப்பினர்கள் மற்றும் ருவாண்டா துருப்புக்கள்…
சீனப்புத்தாண்டு: உலகத்தை இணைப்பதற்கான சக்திவாய்ந்த தருணம்
சீனப் புத்தாண்டு அல்லது வசந்தகால விழா சீனாவிலும் உலகளவிலும் மகத்தான கலாசார மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது சீன நாட்காட்டியில் முதல் மாதத்தின் முதல் நாளில் வரும் சந்திர புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
பாரம்பரியமாக,…
இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 1000 கிலோ வெடிகுண்டு அனுப்ப உத்தரவு: ட்ரம்பின் அதிரடி முடிவு
கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தடை விதித்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள…
கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல..!அமெரிக்கா வெளியீட்டு புதிய ஆய்வு முடிவுகள்
கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் இல்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல்
கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்த விவாதம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CIA),…
சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை
நாட்டில் சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக…
அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்ட இலங்கையர்
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஜோஹன் பெரிஸ் 4,892 மீட்டர் உயரத்தில் அடைந்து, இந்த நம்பமுடியாத சாதனையை அடைந்த முதல் இலங்கையர்…