பனாமா கால்வாய் பாலம் அருகில் தீ ; வெடித்துச் சிதறிய எரிபொருள் தொட்டிகள்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கரீபியன் கடல் – பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் பனாமா கால்வாய் அருகிலுள்ள பாலத்துக்கு கீழ் உள்ள பால்போவா எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீப் பரவியதனால் அங்கிருந்த எரிபொருள் தொட்டிகள் வெடித்துச் சிதறியுள்ளன.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.