;
Athirady Tamil News

அநாவசியமாக முட்டைகளை சேகரிப்போருக்கு எச்சரிக்கை !!

அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்க்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்கள் , 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை…

நல்லூரான் சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! (படங்கள்)

நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்க பிரதிஷ்டை…

மூழ்கி கிடக்கும் முஸ்லிம் அரசியலும்! (கட்டுரை)

சுயநல, விண்டாவாத, சர்வாதிகார போக்குள்ள ஒருவர் எவ்வித நேரடி அனுபவமுமின்றி ஒரு அமைப்பினது அல்லது வீட்டினது அல்லது நாட்டினது தலைவராக வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆசியாவின் ஆச்சரியமாக பார்க்கப்படும் இலங்கை தேசமே சாட்சியாக இருக்கிறது.…

தொழிற்சாலையில் 1அரை கோடி கொள்ளை சம்பவம் – ஐவர் கைது!! (படங்கள், வீடியோ)

சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள…

பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக…

சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள்…

மாகாணங்களில் மட்டுமின்றி மத்தியிலும் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி வரலாற்று தவறை தொடர்ந்தும் விடும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம்…

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!!

அம்பலாங்கொடை - தெல்துவவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அம்பலாங்கொடை…

புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பதினொராவது நினைவாண்டில் பல்வேறு உதவிகள்..…

புங்குடுதீவு "நாகேஷ் அக்காவின்" பதினொராவது நினைவாண்டில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டனவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம்…

கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் – வாகனத்தில் சென்றவாறே…

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தினை இன்றைய தினம்(21) போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வாகனத்தில் சென்றவாறே பார்வையிட்டார். குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்…

மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே!! (மருத்துவம்)

இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும். ‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…

சீ.ஐ.டியில் தடுத்து வைத்து விசாரணை !!

வசந்த முதலிகே உட்பட மூவர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சீ.ஐ.டி) பொறுப்பேற்றுள்ளதுடன், 72 மணி நேர தடுப்பு உத்தரவுகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல்; தொடர்பில்லை என்றால் பயம் எதற்கு?

தங்களுக்கும் தொடர்பிருப்பதாலேயா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாட்டு தலைவர்கள் தயங்குகிறார்கள் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது. தலைவர்கள் நேர்மையானவர்கள் என்றால்,…

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசைகள் இடம் பெற்றன. ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள்…

பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த பொன்சேகா !!

கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பொலிஸார் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்வதாக எதிர்க்கட்சி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.…

இலவசம் இல்லை: ஜனாதிபதி அதிரடி !!

யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு…

நல்லூர் தேர் வெள்ளோட்டம்!!

சரித்திரப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான…

நகைக்கடை வியாபாரிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (வீடியோ,…

நகைக்கடை வியாபாரிகள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடல் ஒன்று கல்முனை தலைமையக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(20) மாலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலித்த 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியிலான சோதனைகளின் போது இந்த…

முட்டை விநியோகம் இடைநிறுத்தம்!!

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால்…

இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்!!

மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்…

யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என…

பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில்…

கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது. சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி – மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர்…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி - மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம் வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார்…

யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே…

போதைவஸ்துக்கு எதிராக யாழில் போராட்டம்!!

போதைவஸ்து பாவனைக்கு எதிராக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. பன்னாட்டு புகையிலை…

கோழி இறைச்சிக்கும் வருகின்றது கட்டுப்பாட்டு விலை!!

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படும் என வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

மஹிந்த அதிரடி அறிவிப்பு!!

அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள்…

எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20) முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக்…

ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை!!

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச…

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது-கல்முனையில் சம்பவம்!! (படங்கள்)

கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இக்கைது சம்பவம்…

பிஸ்கட் அத்தியாவசியம் தானா? (கட்டுரை)

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதுடன், அத்தியாவசியமானது மற்றும் அத்தியாவசியமற்றது என சகல பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளதை எம்மால் உணர முடிகின்றது. விலைவாசி உயர்வுக்கேற்ப மக்களின் வருமானங்கள்…