;
Athirady Tamil News

கதிர்காம ஆலயத்திற்கு விசேட பேருந்து சேவைகள்

0

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையிலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமம் வரையிலும் இந்த விசேட பேருந்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் நலன் கருதி, கதிர்காமம் பேருந்து நிலையத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக இரண்டு விசேட முன்பதிவு நிலையங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன. கதிர்காம உற்சவத்திற்குச் செல்லும் பக்தர்கள் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.