;
Athirady Tamil News
Daily Archives

4 June 2022

கொழும்பில் இராணுவ சிப்பாய் தற்கொலை !!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை - தயா…

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் தேவை – பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 21-ம்…

2021- 22ம் ஆண்டிற்கான வைப்பு நிதி வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம்..!!

2021-22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது நான்கு பத்தாண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்,…

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!!

சீனர்களுக்கு விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்…

பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்..!!

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர் கே கிராமத்தில் 28 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா (28) மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், சித்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று…

சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் !!

மே 09 சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டததரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அதன் தலைவர்…

’காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறியப்படும்’ !!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மல்வானை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே…

’டொலர்களை சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன’ !!

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதின் ஊடாக, அதிக டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “வகுப்பறைகளுக்கான கணினி தொழில்நுட்ப பலகைகள்” எனும் தொனிப்பொருளின் கீழ்…

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை !!

கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று உள்நுழைவதற்கு ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் படி யோர்க் வீதி , பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட்ட வீதிகளுக்கு உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுளது. கோட்டைப்…

’நாடு மேலும் மோசமான நிலையை எதிர்நோக்கும்’ !!

நாடு இனி வரும் காலங்களிலேயே மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

எரிவாயுவை கோரி மக்கள் போராட்டம் !!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் எரிவாயுவை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றுச் சிலிண்டர்களுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியை மறித்து மக்கள் நேற்று (3) போராட்டத்தில்…

போதை மாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது !!

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தானியகம பிறீமா விடுதிக்கு அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ்…

போராடினால் எதனையும் பெற்றுகொள்ள முடியும்!!

போராடினால் எதனையும் பெற்றுகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை…

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது சட்டம் அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல்வேறு கோரிக்கைகள்…

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு..!!

பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள…

கர்நாடகாவில் பேருந்து- சரக்கு வாகனம் மோதி பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி ..!!

கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக…

உத்தரபிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

புதுடெல்லி: பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அம்மாநிலத்துக்கு இன்று காலை சென்றார். அவரை லக்னோ விமான நிலையத்தில் மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், மத்திய பாதுகாப்பு, மந்திரி ராஜ்நாத்சிங்,…

உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்..!!

4.6.2022 04.30: உக்ரைன் மீது ரஷியா நடத்திய போரால் உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன. உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாட்டின் மந்திரிசபை…

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் கூடாது –…

நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மரங்களை வெட்டுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட டி.என்.கோதவர்மன் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வபோது இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகள்…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்..…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################ வேலணையைச் சேர்ந்தவரும், அங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 25 ஆம்…

இந்தியாவில் குறைந்து வரும் நிலக்கரி இறக்குமதி- மத்திய அரசு தகவல்..!!

இந்தியாவில் உள்ள 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. இந்த அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி…

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் தாக்குதல்- செங்கல் சூளை தொழிலாளி சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றி வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றும் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல்…

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடாதீர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!!

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக…

உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி- பிரதமர் மோடி பாராட்டு..!!

உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. புஷ்கர் சிங் தாமி முதல்வராக…

கீழ்திருப்பதியில் பக்தர்கள் 30 ஆயிரம் பேர் தங்கி ஓய்வெடுக்க வசதி..!!

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகால அசோக்குமார் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே மலையில் பக்தர்களுக்கு…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி,…

கேரளாவில் மீண்டும் பரவுகிறது- பறவை காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி..!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாநில சுகாதார துறையினர் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்த…