;
Athirady Tamil News

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தல்

0

உணவுப் பாதுகாப்பு என்பது தனிமனித ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டது; அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பற்ற எதுவும் உணவு ஆகாது” என்பதே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

உலகளவில், மாசுபட்ட மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் சுமார் 420,000 இறப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இது பொருளாதார வளர்ச்சியையும் முடக்குகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பாதுகாப்பற்ற உணவினால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு ஆண்டுக்கு 95 பில்லியன் அமெரிக்க ​ெடாலர்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு சூழலின் நன்மைகள் குறித்து UNIDO நடத்திய ஆய்வின்படி, உணவுப் பாதுகாப்பு அபாய மேலாண்மை மேம்பாட்டிற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீடும், ஆண்டுதோறும் 9 மில்லியன் அமெரிக்க டொலர் நிகர பட்ஜெட் ஒதுக்கீடும் செய்யப்பட்டால், அதன் மூலம், ஆண்டுதோறும் குறைந்தது 113 மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி மதிப்பை கணிசமாக அதிகரிக்க முடியும்.

சர்வதேச சந்தைகள் தரநிலைகளுக்கு இணங்கி நடக்கும் தயாரிப்புகளே பெரிதும் வரவேற்கப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களில், இந்தத் தரநிலைகள் சட்டபூர்வ கடமைகளாக மாறுகின்றன.இலங்கையின் உணவு விநியோகச் சங்கிலியில் உள்ள உணவு வணிக செயற்பாட்டாளர்கள் (FBOs) உணவுப் பாதுகாப்பு நிலைமைகளை மேம்படுத்துவதிலும், HACCP (அபாய பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டு புள்ளிகள்) போன்ற உணவுப் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளுடன் (FSMS) தொடர்புடைய செயல்பாட்டுச் செலவுகளை ஏற்பதற்கும் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

அடுத்த 10 ஆண்டுகளில், உணவுத் துறையில் மேற்கொள்ளப்படும் 1.25 பில்லியன் டொலர் கூடுதல் முதலீடானது, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியை (GNP) மேலும் 2.5% அதிகரிக்கச் செய்யும் என்றும், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்களில் 122,236 பேரின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நன்மைகளைப் பெற, ஏற்றுமதி செய்யும் 3,823 நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், உபகரணங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் மொத்தம் 822 மில்லியன் டொலர் முதலீடு தேவைப்படுகிறது.

சுய-ஒழுங்குமுறை மற்றும் சர்வதேச பிரதிநிதித்துவம்: நிறுவன மற்றும் சட்டமன்ற சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்டு, உணவுத் துறையினர் கூட்டாக பொதுவான நடைமுறைகளை வரையறுத்து, உணவுத் தரங்களை சுய-ஒழுங்கு (Self-regulatory) முறையில் பின்பற்றுவது முக்கியம். இதற்காக, சர்வதேச தர நிர்ணய மன்றங்களில் இலங்கையை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு UNIDO தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.உள்நாட்டுத் திறன்களை சர்வதேச அளவுக்கு உயர்த்துதல்உ

ள்நாட்டில் சர்வதேச தரத்திலான சான்றளிப்புச் சேவைகளை வழங்குவதற்காக, தேசிய தர உள்கட்டமைப்பு (NQI) நிறுவனங்கள் மற்றும் 28 இணக்கப்பாட்டு மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (CAB) UNIDO புதிய அங்கீகாரப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.விநியோகச் சங்கிலி கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு: FAO அமைப்பானது, சுகாதார அமைச்சு மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உணவு உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலியின் தன்மையைக் கண்காணித்தல் (traceability) மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகிய பணிகளில் ‘BESPA-FOOD’ திட்டம் ஊடாக நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது​ைஉணவுப் பாதுகாப்பு கல்வியைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் இணைப்பதன் மூலம், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட, விழிப்புணர்வுள்ள ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.ஒரு வலுவான உணவுப் பாதுகாப்பு அமைப்பு என்பது, ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளும் உந்துசக்தியாகவும் விளங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.