புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)
#################################
புங்குடுதீவு நான்காம் வாட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவரும், கொழும்பு வெள்ளவத்தையில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான “கிளாக்கர்” என அழைக்கப்படும் அமரர் செல்லையா கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதியினை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமத்தில் சிறப்பு ஆத்மசாந்தி வழிபாட்டுடன் தானம் வழங்கியதுடன் தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.
விசேட ஆத்மசாந்தி வழிபாட்டில் கலந்து கொண்ட உறவுகளுக்கு அவ்விடத்திலே மதிய உணவு பரிமாறப்பட்டதுடன், வேறுசில கிராமங்களில் வாழும் தேவையுடைய உறவுகளுக்கு உணவு பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
எமது மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்கள் ஊடாக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட இணைப்பாளர் திருமதி.நவரத்தினம் பவளராணி அவர்கள் கிராமங்களுக்கு சென்று தேவையுடைய குடும்பங்களுக்கு பொதி செய்யப்பட்ட உணவினை வழங்கி வைத்தார்.
அத்துடன் அமரர் கனகசபாபதி ஐயாவுடைய முதலாமாண்டு திதி நினைவாக மிகவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஏற்பாடுகளை செய்துள்ளது. நாளையதினம் எமது மாவட்ட இணைப்பாளர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதி வழங்கப்படவுள்ளது.
அமரர் செல்லையா கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு சதுர்த்தி திதியினை அனுஸ்டிக்குமுகமாக அன்னாரின் குடும்பத்தின் சார்பில் அன்னாரின் மகள் திரு.திருமதி. ஜோதிதாசன் சித்திரா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் மேற்படி நிகழ்வுகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது.
அமரத்துவமடைந்த “கிளாக்கர்” என அன்புடன் அழைக்கப்படும் செல்லையா கனகசபாபதி அவர்களின் ஆத்மாசாந்தியடைய தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இறைவனை வேண்டுவதோடு, தனது தந்தையாரின் திதியினை முன்னிட்டு, தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆத்மசாந்தி நிகழ்வுக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு அனைத்துக்கும் நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் மகள் ஜோதிதாசன் சித்திரா குடும்பத்தினருக்கும் தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.10.2021









































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1