;
Athirady Tamil News

வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; பற்றி எரியும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எண்ணெய் தொழிற்சாலை

0

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலால் அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கு கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலம் இன்று காலை ஆளில்லா வானூர்திகள் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதோடு, தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச எரிசக்தி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் புஜைரா எண்ணெய் சேமிப்பு முனையத்தின் மீதான இந்தத் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.