;
Athirady Tamil News

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

0

இலங்கையில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவுடன் நிறைவடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதோடு QR ஒதுக்கீடுகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும்
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (21) நள்ளிரவுடன் எரிபொருள் QR ஒதுக்கீடுகள் நிறைவடைந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (22) மீண்டும் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

QR குறியீடு முறையை அமுல்படுத்தியதன் ஊடாக நாட்டின் எரிபொருள் கொள்வனவை 20 வீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருண தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.