கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ)
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ)
யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் சார்பில் லண்டனில் வதியும், அவரது மகனான தோழர்.நகுலன் வழங்கிய நிதி பங்களிப்பில் முதலாவது நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த முதல் நிகழ்வானது வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் முன்பள்ளி மாணவர்களுக்கு இன்று சிவலோகேஸ்வரியின் ஜனன தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முதலில் முன்பள்ளி சிறுவர்கள் அவரது பெற்றோர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடந்து நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களினால் நெளுக்குளம் சாம்பல்தோட்டம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து இருந்த அதேவேளை, வெளிச்சம் அறக்கட்டளை உறுப்பினர் நடராஜா மிலக்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டத்தில் அமைந்துள்ள வவுனியா சாம்பல் தோட்ட முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியை திருமதி சாரங்கன் மயூரி அவர்கள் தலைமையில் அப்பிரதேச பிரதிநிதிகள் உட்பட சிலரும் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இதேவேளை இரண்டாவது நிகழ்வாக அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்தித்து தற்போதைய மழை, வெள்ளம், புயல் போன்ற காரணங்களினால் மிகவும் பாதிப்படைந்த சுமார் இருபத்தைந்து கும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொருட்க்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்துக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
12.12.2024
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (வீடியோ)
















“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos