;
Athirady Tamil News

புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம்

0

புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம்

இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த போது அவர்களை விடுவிக்குமாறு இலங்கை, இந்திய அரசுகளைப் புலிகள் வற்புறுத்தினர்.

ஆனால் அமைச்சர்களான பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலி ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை மீறிச் செயற்பட்டதால் கொழும்பிற்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றனர். இதற்கு ஜே ஆரும் இணங்கினார்.

1987ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹபரண – திருகோணமலை வீதியிலுள்ள கிதுலுதுவ (Kithuluthuwa )  என்ற இடத்தில் பஸ் வண்டியில் பயணம் செய்த 126 அப்பாவி மக்களைக் கொலை செய்ததில் உடந்தையாக புலேந்திரன் செயற்பட்ட செய்தியும் அப்போது வெளியாகியிருந்தது.

ஜே ஆரின் உத்தரவைப் பெற்ற பலாலி முகாம் பொறுப்பாதிகாரி பிரிகேடியர் ஜயந்த ஜயரத்ன 17 கைதிகளையும் கொழும்பு அனுப்பும் பொருட்டு விமானப்படை விமானத்தை ஏற்பாடு செய்தார்.

இதே ஆண்டு அக்டோபர் 2ம், 3ம் திகதிகளில் இடம்பெற்ற இச் சம்பவங்களை இந்தியப் பிரதமருக்கு விளக்கிய பின் இலங்கை திரும்பிய தீக்சித், புலேந்திரனையும், அவரது சகாக்களையும் கொழும்பிற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளைத் தடுக்குமாறு இந்திய சமாதானப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கரிகிரித் சிங் இற்கு அறிவுறுத்தினார்.

தூதுவர் தீக்சித் இன் அறிவுறுத்தல் கிடைத்த போதிலும் அவர் தனது மேலதிகாரிகளுடன் அதாவது இந்திய வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, ராணுவத் தலைமையகம் என்பவற்றுடன் பேசிய பின் ஈற்றில் ஜனாதிபதி ஜே ஆருடன் நிலமைகளை விளக்கிய போது அவரும் இயைந்தார்.

அதன் பிரகாரம் இந்திய சமாதானப் படையினரிடம் கைது செய்யப்பட்ட 17 பேரையும் ஒப்படைக்க இணங்கினர்.

இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெறலாம் என முன்கூட்டியே அனுமானித்த அமைச்சர் லலித் விசேட விமானம் ஒன்றினை அதிகாலையிலேயே பலாலிக்கு அனுப்பினார்.

blogger-image-1109447018 புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் blogger image 1109447018

(இந்தியப்படைத் தளபதி திபீந்தர்சிங், மாத்தையா)

கைது செய்யப்பட்ட 17 பேரையும் தாம் பார்க்க வேண்டுமென புலிகள் தரப்பினர் சமாதானப் படையினரை வற்புறுத்தியதால் மாத்தையா தலைமையில் ஒரு குழுவினர் உணவு மற்றும் மருந்துகளுடன் இலங்கை ராணுவ மேற்பார்வையில் கைதிகளிடம் கையளிக்க அனுமதித்தனர்.

இவ் உணவு வகைகளுடன் ‘சயனைட்’ வில்லைகளையும் கையளித்ததை எவராலும் காண முடியவில்லை.

ஜே ஆருடன் தொடர்ந்து பேசிய தூதுவர் தீக்சித் 17 பேரையும் எவ்வகையிலாவது பலாத்காரத்தைப் பயன்படுத்தியேனும் விடுவிக்குமாறு இந்தியப் படைத் தளபதியிடம் கோர, பதிலுக்கு அங்கு அவர்களை ஏற்றிச் செல்ல விமானம் காத்திருப்பதாகக் கூறினார்.

pulenthy-praba புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் pulenthy prabaலெப்.கேணல் புலேந்திரன்  பிரபாகரன்.

எவ்வாறாயினும் புலேந்திரன் உட்பட இதர 16 பேரும் சயனைட் வில்லைகளை விழுங்கி தற்கொலை செய்தனர். இதன் காரணமாக அதே மாதத்தில் மேஜர் ஜெனரல் கரிகிரித் சிங் சகல பதவிகளும் பறிக்கப்பட்டார்.

இத் தற்கொலைச் சம்பவம் காரணமாக புலிகள் மிகவும் கோபமடைந்து கிழக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்களைத் தாக்கினர்.

1987ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி வாழைச்சேனையில் தபாற் புகையிரதம் எரியூட்டப்பட்டு 40 பேரும், ‘தரவை’ என்ற கிராமத்தில் 25 பேரும், ‘சகரபுர’ என்ற சிங்களக் கிராமத்தில் 27 பேரும் படுகொலை செய்யப்பட்டதோடு 57 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

எமது ராணுவம் ‘தேசாபிமானிகள்’ எனக் கூறும் சிங்கள பயங்கரவாதிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தமையாலும், புலிகள் எல்லைக் கிராமங்களைத் தாக்கிய போது இலங்கை – இந்திய ஒப்பந்தப் பிரகாரம் நாம் முகாம்களுக்கள் முடக்கப்பட்டதாலும் தலையிட முடியவில்லை.

இதனால் இந்திய சமாதானப் படையினர் தமக்குப் பாதுகாப்புத் தருவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை என சிங்கள பொதுமக்கள் குரல் எழுப்பினர்.

எமது மக்கள் பாதுகாப்புக் கோரிய போது நாம் கையறு நிலையில் இருந்தோம். ராணுவத்தில் இணைந்திருப்பதன் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தினோம்.

சிங்கள பழமொழியில் ‘போரில் பயன்படுத்தாத வாளைக் கையில் வைத்திருப்பதில் என்ன பயன்?’என்பதே எங்கள் எண்ணத்தில் எழுந்தது. என்னை ராணுவ அதிகாரி என அழைப்பதற்கு வெட்கமடைந்தேன்.

ஒரு புறத்தில் எல்லைக் கிராம சிங்கள மக்கள் தமது பாதுகாப்பைக் கோரி எம்மிடம் கையேந்துகிறார்கள். மறு புறத்தில் நாம் துரோகிகள் என ‘தேசாபிமானிகள்’ என்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே வேளை ராணுவத்தின் பெற்றோர் கொலை செய்யப்படுவார்கள் என பயமுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறான சிக்கலான நிலமையை எண்ணும்போது எதிர்காலத்தில் ராணுவத்தில் இணைய எண்ணுபவர்கள் இவ்வாறான சங்கடங்களில் மாட்டிக் கொள்ளக்கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்.

lt_col_kumarappa2 புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் lt col kumarappa22

லெப்டினன்ட் கேணல் குமரப்பா

1987ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 17 பேரும் தற்கொலை செய்த நிகழ்வு காரணமாக இந்திய சமாதானப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையேயான உறவு முறிந்தது.

இச் சம்பவத்தின் பின்னர் இந்தியப் படையின் ஒரு குழுவினர் யாழ். நகரத்திற்குள் சென்ற போது 6 ஜவான்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இலங்கை வந்த இந்திய பிரதம ராணுவத் தளபதி ஜெனரல். சுந்தர்ஜி புலிகளின் ஆயுதங்களைப் பலாத்காரமாகக் களையுமாறு உத்தரவிட்டார்.

ஆனால் தூதுவர் தீக்சித் இன் எழுத்துகளின்படி அவ் உத்தரவைத் தென் பிராந்திய கமான்டர் லெப்ரினன்ட் ஜெனரல் திபிந்தர் சிங் ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் அவரது அபிப்பிராயத்தை மீறி பிரதம ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக 1987ம் ஆண்டு அக்டோபர் 7ம், 8ம் திகதிகளில் புலிகளின் ஊடக நிலையங்கள் தாக்கப்பட்டன. அக்டோபர் 10ம் திகதி யாழ். குடாநாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்திய ராணுவத்தினர் தீர்மானித்தனர்.

இதன் விளைவாக இந்திய சமாதானப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையேயான போராக அவை மாறின. புலிகளுக்கு எதிரான போரை மரபு வழிப் போர் அடிப்படையிலேயே நடத்தத் தீர்மானித்துச் செயலில் இறங்கினர்.

ipkf-killed புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் ipkf killed

இரண்டாவது உலகப் போரின்போது படையினர் ‘பரசூட்’ மூலம் படையினரை இறக்குவது பயன்படுத்தப்பட்டது. இதே தந்திரத்தையே இவர்களும் இங்கு கையாண்டனர். யாழ். பல்கலைக் கழக வளாகப் பகுதிக்குள் புலிகள் தமது தலைமைச் செயலகத்தை வைத்திருந்தமையாலும், முக்கிய தலைவர்களை அங்கு உயிரோடு கைப்பற்றலாம் என்ற நோக்கோடும் புலிகளின் செயற்பாடுகள் பற்றிய எவ்வித ஆய்வுகளும் இல்லாமல் இந்திய ராணுவம் அங்கு தனது 9வது கமான்டோ ‘பரசூட்’ பிரிவினரை இறக்கியது.

இந்திய ராணுவத்தின் தொலைபேசிப் பரிவர்த்தனையை ஒட்டுக் கேட்ட புலிகள் இச் செய்தியை அறிந்ததும் தயாராகினர்.

1987ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி நடு ராத்திரியில் பிரபாகரன் அங்கிருந்து வெளியேற ஏனையோர் இந்திய ராணுவத்தை எதிர்க்கத் தயாராகினர்.

இவ் ஏற்பாடுகளை அறிந்திராத பரசூட் பிரிவினர் அங்கு இறங்க முற்பட்ட வேளையில் சரமாரியான துப்பாக்கித் தாக்குதலால் நிலத்தில் தரையிறங்குவதற்கு முன்பதாகவே பலரும் இறந்தனர்.

இவ்வாறு ஆரம்பித்த இந்திய ராணுவ மரணங்கள் யாரோ மக்களுக்காக, யாரோ மக்களின் மண்ணில் ஏற்பட்ட போது அவை சமான்ய மக்களின் மரணத்தை நோக்கியதாகவே மாறின.

சமாதானத்திற்கும் அல்லது இந்தப் போரிற்கும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களே அதற்கான விலையைக் கொடுத்தனர். இதே இயக்கமே சிங்கள மக்களினதும், ராணுவம், போலீஸ் போன்றோரினது மரணத்திற்கும் காரணமாக இருந்தது.

ஒரு புறத்தில் தென் பகுதிப் பயங்கரவாதிகளால் இளைஞர்கள் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்பட்டது போலவே தமிழ் இளைஞர்களும் வழிநடத்தப்பட்டார்கள்.

bluestar-Maj_-Gen_-Brar-Lt_-Gen_-Sundarji-and-Gen_-Vaidya புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் bluestar Maj Gen Brar Lt Gen Sundarji and Gen Vaidya

இருப்பினும் இந்திய ராணுவத்தின் மரணங்கள் பெரும்பாலான இலங்கையர்களுக்கும், எமக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. குறிப்பாக இந்திய ராணுவத்தின் கைகளில் புலிகள் மடிவது எனக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.

இக் கருத்து ஒரு உயர் ராணுவ அதிகாரி மட்டத்திலிருந்து வெளிவருவதை சில வாசகர்கள் ஏற்க முடியாது போகலாம். ஆனாலும் தமிழ்ப் பயங்கரவாதிகளை   இந்திய தரப்பினரே வளர்த்து, பயிற்சிகளை வழங்கி ஆதரித்த பின்னணியிலும்  அதேவேளை இலங்கை அரசின் மேல் அழுத்தங்களைப் பிரயோகித்து, தனது கல்வி அறிவற்ற ஜவான்கள் மூலமாக எமது மண்ணில், எமது ராணுவத்தை அவர்கள் நடத்திய விதமும், இவர்களின் வருகையால் தென்னிலங்கைக் கிராமங்களில் பயங்கரவாதம் ஏற்படுத்திய கொடுமைகளும் இந்திய ஜவான்களின் மரணம் குறித்த கவலையை ஏற்படுத்தவில்லை. உண்மையில் அவர்களின் பெற்றோரின் நிலமை குறித்தே எனது கவலை இருந்தது.

இவ்வாறு புலிகளுக்கும், சமாதானப் படையினருக்குமிடையே முறுகல் நிலை விஸ்தரித்துச் சென்றதை அவதானித்த பிரதமர் பிரேமதாஸ இந்திய சமாதானப் படையினர் உள்நாட்டு நிலமைகளை மோசமான நிலைக்குத் தள்ளுவதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டி எமது பிரச்சனையை நாமே தீர்க்கிறோம் என்றார்.

அதே வேளை ஜனாதிபதி ஜே ஆரும் பொதுமன்னிப்பு வழங்கும் காலக்கெடுவை இனிமேல் நீடிக்க முடியாதெனவும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் புலிகள் முழுமையாக இணங்காவிடில் தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பிரதேசங்களுக்கு வழங்கவுள்ள அதிகாரபரவலாக்க யோசனைகள் குறித்துப் பேசவும் தயாராக இல்லை என்றார்.

இந்திய ராணுவமும் சமாதானப் படையினரின் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் அங்கு நான்கு படைப் பிரிவுகளை அமைத்தனர்.

அத்துடன் அதற்கான தலைமைக் காரியாலயங்களை யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களில் அமைத்து ஒட்டு மொத்த ராணுவத் தளபதியாக ஏ.எஸ். கல்கட் அவர்களை நியமித்து அவரது தலைமையகத்தை சென்னையில் அமைத்தனர்.

ஆரம்பத்தில் இந்திய சமாதானப் படையினரைத் தமிழ் மக்கள் மாலையிட்டு வரவேற்ற போதிலும், காலப் போக்கில் புலிகளுடன் ஏற்பட்ட மோதல்களால் அவர்களின் ஆதரவும் படிப்படியாக வற்றியது.

mgr_jaya_body_18254 புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம் mgr jaya body 18254

அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம் ஜி ஆரின் மரணம் புலிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவரே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை முன்னோக்கித் தள்ளிப் பிரபாகரனையும் ஏற்றுக்கொள்ள வைத்தவர்.

ஆனால் பின்னர் ஏற்பட்ட மோதல்களால் சமாதானப்படையினர் – புலிகள் மோதலில் அவர் புலிகள் சார்பாகவே செயற்பட்டார். இதனால் அவரது மரணம் பெரும் இழப்பாக அவர்களுக்கிருந்தது.

உதாரணமாக சமாதானப்படையினர் – புலிகள் மோதலில் காயமடைந்த பல புலி உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். இது தமிழ்நாடு அரசு வெளிநாட்டுப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது நாட்டு ராணுவத்திற்கு எதிராக போராடியவர்களை ஆதரிப்பது என்பது மிகவும் வியப்பானது.

இக் கால வேளையில் சமாதானப்படை அதிகாரிகள் சிலருடன் நான் கருத்துக்களைப் பரிமாறிய வேளைகளில் அவர்களின் மனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. தமது சக ஜவான்கள் அந்நியர்களின் போரில் ஈடுபட்டு மடிவது, அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றத் தாம் பயன்படுத்தப்படுவது, தமது நாட்டு மக்களால் தாம் ஏமாற்றப்படுவது போன்றனவற்றால் கவலையடைந்தனர்.

( வடக்கு – கிழக்கு மாகாணசபை விவகாரம் அடுத்த வாரம்)

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.